Karuvattu Kuzhambu: நாகர்கோவில் பாணியில் நாவூரும் கருவாட்டு குழம்பு
பொதுவாகவே தென்னிந்திய உணவுகள் உலக புகழி் பெற்றவை. குறிப்பாக ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்டிவொரு வகை உணவுகள் பெயர் பெற்றதாக இருக்கும்.
அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் நினைத்தாலே நாவூரவைக்கும் நாகர்கோவில் பாணியில் ஸ்பெஷல் கருவாட்டு குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
விலைமீன் கருவாடு - 500 கிராம்
மாங்காய் - 1
கத்திரிக்காய் -1
வாழைக்காய்-1
வழுதனங்காய்-1
முருங்கைக்காய்-1
தேங்காய் - 1/2 மூடி துருவியது
சின்ன வெங்காயம்- 10
பூண்டு- 2 பல்
சீரகம்- 1 தே.கரண்டி
மிளகு - 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள்- 1 தே.கரண்டி
மல்லி தூள்-1 தே.கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தே.கரண்டி
செய்முறை
முதலில் கருவாட்டினை நன்றாக இரண்டு முறை சுடுதண்ணீரில் கழுவி சுத்தம் செய்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தேங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு மிக்ஸியில் சாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மண் சட்டியை அடுப்பில் வைத்து கருவாடு, தக்காளி, வழுதனங்காய், முருங்கைக்காய், பச்சை மிளகாய், கொஞ்சம் புளி கரைசல் ஆகியவற்றை சேர்த்து,அதனுடன் அரைதத்த மசாலாவையும் ஒன்றாக சேர்த்து மண் சட்டியில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
குழம்பு கொதிக்கும் போது கருவேப்பிலை போட்டு, கடுகு வெந்தயம், சின்ன வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து குழம்பில் ஊற்றிவிட்டு இறுதியாக மாங்காய் சேத்து நன்றாக கிளறிவிட்டு நன்றாக கொதிக்க வி்ட்டு இறக்கினால் அவ்வளவு தான்,நாகர்கோவில் பாணியில் கருவாட்டு குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |