காதில் இரைச்சல் சத்தம் கேட்பது ஏன் தெரியுமா?
பெரும்பாலும் முதியவர்களுக்கு காதில் இரைச்சல் சத்தம் கேட்கலாம், விசில் அடிப்பது போன்றோ, ஒருவிதமான இரைச்சலோ இருக்கலாம்.
இது ஒரு நோயா என்றால், அது கிடையாது, நோயின் வெளிப்பாடாக மட்டுமே இரைச்சல் சத்தம் இருக்கும்.
காதில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவோ அல்லது உடலின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவோ இருக்கலாம்.
இது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம், சிலருக்கு தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ அல்லது தாங்க முடியாத அளவுக்கு கூட இருக்கலாம்.
இதனை தற்காலிகமானது அல்லது நிரந்தரமானது என இரண்டு வகையாக பிரிக்கலாம்.
காதுக்குள் இயற்கையாக சுரக்கின்ற மெழுகு பொருள் அடைத்துக் கொண்டால் தற்காலிகமாக காது இரைச்சல் இருக்கலாம்.
நிரந்தரமானது என்றால் முதுமையில் ஏற்படுவதை குறிப்பிடலாம், வயோதிகம் காரணமாக ஏற்படும் எலும்பு தேய்மானம், காதுக்கு செல்லும் ரத்தம் குறைபாடு போன்றவற்றால் ஏற்படுகிறது.
எனவே காதில் இரைச்சல் இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு தகுந்த சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது நல்லது.