ஐஸ்வர்யாவை தொடர்ந்து இளைய மகளுக்கு சூப்பர் ஸ்டார் செய்யும் காரியம்: வரவேற்பு கிடைக்குமா?
ஐஸ்வர்யாவை தொடர்ந்து இளைய மகளுக்காக சூப்பர் ஸ்டார் செய்யவிருக்கும் காரியம் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், இவர் நடிப்பில் கடைசியாக ஜெய்லர் திரைப்படம் வெளியானது.
இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாக ரஜினிகாந்த் இயக்கத்தில் “லால் சலாம்” திரைப்படம் வெளியாகவிருக்கின்றது.
இரண்டாவது மகளுக்கு கொடுக்கும் ஆதரவு
இந்த நிலையில், மூத்த மகளுக்காக “லால் சலாம்” படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட ரஜினிகாந்த் இரண்டாவது மகளுக்காகவும் ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளராம்.
கோச்சடையான், விஐபி 2 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள சௌந்தர்யா, அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி- லாரன்ஸ் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தின் கதை எப்படி அமையப் போகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |