தந்தை ரஜினிகாந்த் உடல் நலனுக்காக மகள் செளந்தர்யா செய்த காரியம்! பிரார்த்திக்கும் ரசிகர்கள்
தந்தை ரஜினிகாந்தின் உடல்நிலைக்கு சரியாக மகள் செளந்தர்யா திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், மகன் மற்றும் கணவருடன் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில மாதங்களுக்கு முன்பு தான் அமெரிக்காவில் உள்ள மாயோ மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு, சென்னை வந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தின் இரண்டாவது மகள், சௌந்தர்யா தன்னுடைய தந்தையின் உடல் நலனுக்காக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், மகன் மற்றும் கணவருடன் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.
மேலும், அண்ணாத்த பட ஷுட்டிங்கின் போது படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட போதிலும், உயர் ரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் இரண்டு நாள் சிகிச்சை பெற்ற பின்னரே சென்னை திரும்பினார்.
சில நாட்கள் ஓய்வில் இருந்த நிலையில், தன்னுடைய உடல் நலனை கருத்தில் கொண்டு அரசியலை விட்டே ஒதுங்குவதாகவும் அறிவித்தார். இவர் இந்த முடிவை எடுக்க காரணம் கூட மகள்கள் தான் என கூறப்பட்டது.
ஒருவழியாக கடந்த ஏப்ரல் மாதம் 'அண்ணாத்த' ஷூட்டிங் பணிகளை முடித்து கொடுத்து விட்டு, தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடமான, மாயோ கிளினிக் சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு சென்னை திரும்பினார்.
இந்நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிப்பது குறித்து இயக்குனர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், தந்தையின் உடல் நலனுக்காக இவரது மகள், கணவன், மற்றும் மகனுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.