விமான விபத்தில் உயிரிழந்த பிரபல நடிகை! 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது?
விமான விபத்தில் உயிரிழந்த நடிகை சௌந்தர்யாவின் உயில் விவகாரம் தற்போது வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சௌந்தர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் தான சௌந்தர்யா. இவர் பொன்னுமணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.
முதல் படத்திலேயே நவரச நாயகன் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்து ரசிரக்கள் மனதில் இடம் பிடித்த இவர், பின்பு ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா படத்திலும், நடிகர் விஜயகாந்த் உடன் சொக்கத்தங்கம், தவசி என இரண்டு படங்களில் நடித்து அசத்தினார். தெலுங்கில் நிறைய படங்களில் சவுந்தர்யா நடித்தார்.
சுமார் 10 ஆண்டுகள் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த இவர், தனது உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு பாஜகவில் இணைந்த இவர் 2004ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார்.
அப்போது தனது சகோதரர் அமர்நாத் உடன், ஹெலிகாப்டரில் பிரசாரத்துக்காக கர்நாடகாவில் இருந்து சென்ற போது, திடீரென மலை உச்சியில் விமானம் விபத்தில் சிக்கி வெடித்து சிதறியதில் சௌந்தர்யா உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
தற்போது 20 ஆண்டுகள் ஆகியும் அவரது மறைவு ரசிகர்களை கண்ணீர் சிந்தவே வைத்துள்ளது.
100 கோடி சொத்துகள்
சொந்த வீடு, கடை, விவசாய நிலம், பணம், தங்க மற்றும் வைர நகைகள் என சௌந்தர்யாவின் சொத்துக்கள் 100 கோடி ரூபாய்க்கு இருந்துள்ளது.
சொத்துக்கள் குறித்து சௌந்தர்யா உயில் எழுதி வைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவ்வாறு எந்தவொரு உயிலும் இல்லை, அது போலியான உயில் என்று கூறி சௌந்தர்யாவின் தாய் மற்றும் கணவர் இருவரும் 100 கோடி ரூபாய் சொத்தை தங்களுக்குள் பிரித்துக் கொண்டுள்ளார்களாம்.
நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகளான நிலையில், 100 கோடி சொத்து உயிலை அவரது அம்மாவும், கணவருமே பிரித்துக் கொண்ட பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |