தன்னைத் தானே கொத்திக் கொண்டு உயிரிழந்த பாம்பு! பெண்ணின் மீது இறங்கிய பாம்பின் ஆத்மா? பகீர் உண்மை
பிறந்ததிலிருந்து சிறுவன் ஒருவனின் உடம்பில் பாம்பு தோல் போன்று உரிந்து வரும் நிலையில், சிறுவனின் தாய் மீது பாம்பின் ஆன்மா இறங்கிவிட்டதாக கூறப்படுகின்றது.
நடனமாடிய பாம்பு
சிறுவன் ஒருவனின் உடலில் தோல் உரிந்து வரும் நிலையில் இதற்கு பாம்பின் ஆன்மா தான் காரணம் என்று அவனது தந்தை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுவனின் தந்தை கூறுகையில், இரு பாம்புகள் வீட்டு வாசல் முன்பு நடனமாடிக் கொண்டிருந்தபோது, வயதான அம்மா ஒருவர் அதன் மீது துடைப்பத்தை அதன் மீது போட்டார்.
அப்போது, ஒரு பாம்பு தன்னைத் தானே கொத்திக்கொண்டு உயிரிழந்துள்ளது.
அந்த பாம்பின் ஆன்மா கர்ப்பமாக இருந்த தன்னுடைய மனைவிக்குள் இறங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பின்பு அவருக்கு குழந்தை பிறந்த போது குழந்தையின் தோல் பாம்பு சட்டை போன்று உரிந்து கொண்டே இருப்பதாகவும், இதற்காக பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் பயனில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.