சூரியின் மண்டாடி திரைப்படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?
சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் "மண்டாடி" திரைப்படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்துள்ள மண்டாடி திரைப்படம் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் மஹிமா நம்பியார் கதாநாயகியாகவும், சுஹாஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இதனால் படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
படகு பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், சுவாரஸ்யமான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
#Mandaadi Reaches Yet Another Milestone! 🔥#Mandaadi Grosses ₹80+ Crores Worldwide! 💥
— RS Infotainment (@rsinfotainment) September 18, 2026
The Reign Continues! ⛵⚓💥#Mandaadi is Running Successfully in theatres near you! 💥@sooriofficial #Suhas #Sathyaraj @Mahima_Nambiar@RavindraVijay1 @MithunJS5@bala_actor… pic.twitter.com/eDCc9CT45S
படம் சிறந்த திரையரங்க அனுபவத்தை வழங்குவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவான மண்டாடி திரைப்படம் உலக அளவில் ரூ.80 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.