என் வீட்டுல சாப்பிட்ட சூரிக்கு துளிக்கூட நன்றி இல்ல... - போண்டா மணி ஆவேசம்!
என் வீட்டுல சாப்பிட்ட சூரிக்கு துளிக்கூட நன்றி இல்லை என்று பிரபல நகைக்சுவை நடிகர் போண்டா மணி ஆவேசமாக பேசியுள்ளார்.
என் வீட்டுல சாப்பிட்ட சூரிக்கு துளிக்கூட நன்றி இல்லை என்று நகைச்சுவை நடிகர் போண்டா மணி தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரி
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் சூரி. அதன்பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் சூரி. இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் மதுரையில் ஓட்டல் தொழிலையும் சூரி நடத்தி வருகிறார்.
சூரிக்கு துளிக்கூட நன்றி இல்ல
போதிய பணம் இல்லாமல் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டா மணிக்கு மருத்துவ சிகிச்சைக்காக சினிமா பிரபலங்கள் பலர் உதவிக்கரம் நீட்டி வந்தனர். இவருக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சூரியை நடிகர் சூரியை கோபமாக திட்டித் தீர்த்துள்ள தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடிகர் போண்டா மணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் எனக்கு அறுவை சிகிச்சைக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் எனக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார். ஆனால், நடிகர் வடிவேலுவும், நடிகர் சூரியும் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
நடிகர் சூரி என் வீட்டில் தங்கி சாப்பிட்டவர். ஆனால், அவர் எனக்கு ஒரு போன் பண்ணி கூட நலம் விசாரிக்கவில்லை. கூட நடிக்காத விஜய்சேதுபதி சார் எனக்கு உதவி செய்யும் போது சூரிக்கு போனில் விசாரிப்பதற்கு என்ன.
ஒரு காமெடி தொடரில் நடிக்க காதல் சுகுமார், நடிகர் சூரியை தினமும் அழைத்து வருவார். அப்போது சூரிக்கு தினமும் 200 ரூபாய் சம்பளமாக கொடுத்தேன்.
அப்போதெல்லாம் சூரி என் வீட்டில்தான் தங்கினார். என் வீட்டில்தான் சாப்பிடுவார். ஜெயித்த பிறகு சூரி என்னை கண்டுகொள்ளவில்லை என்று வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.