இன்று சூரசம்ஹாரம்: இதை செய்தால் நினைத்தது நடக்கும்- நேரலை வீடியோ
முருக கடவுளின் கையில் இருக்கும் வேலாயுதம் பெரும் சேர்த்த நாளான இன்று சூரசம்ஹாரம் என்பதால் பக்தர்கள்,பிரார்த்தினை செய்வதற்கு கோவிலில் குவிந்து வருகின்றனர்.
பெருமைக்குரிய விரதமாக கந்த சஷ்டி விரதம் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை.
அதுமட்டுமின்றி சூரசம்ஹாரமான இன்று மௌன விரதம் இருந்தால் நாம் கடவுளிடம் வைத்திருக்கும் கோரிக்கைகள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கையே.
இன்று திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்திற்கு முருகனின் கை வேலாயுதமே பெருமை சேர்த்தது. வேலினால் சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டார் முருகப்பெருமான்.
இன்றைய தினம் முருகனை தரிசனம் செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். நோய்கள் நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும் துன்பங்கள் துயரங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
நீண்ட காலமாக குழந்தை இல்லாத பெண்மணி ஒருவர் பூஜை செய்து பல நாட்கள் குழந்தை பாக்கியத்திற்கு வேண்டிய நிலையில், அவளுக்கு பலன் எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளது.
ஒரு நாள் கோவிலுக்கு சென்ற போது தனது குறையை சித்தரிடம் கூறிய போது, "குடம் பிடித்தான், சட்டி கொள்!'' என்று சித்தர் கூறியுள்ளார்.
இதற்கு அர்த்தம் தெரியாமல் குழம்பி நின்ற அப்பெண், சித்தரிடம் சென்று இதற்கு பொருள் என்ன என்று கேட்டுள்ளார்.
அதற்குப் புலவர், குடம் என்பதைக் குக்குடம் என்று பொருள் கொள்ள வேண்டும். குக்குடம் என்றால் சேவல் என்று பெயர். அந்தச் சேவலைக் கொடியில் வைத்திருப்பவன் சேவற்கொடியோன். அவன் யாரென்று உனக்குத் தெரியுமா, அம்மா?'' என்று கேட்டார்.
அதற்கு அப்பெண் தெரியும் ஐயா, அவர்தான் முருகக்கடவுள்'' "ஆம். சட்டி என்பது "கந்த சஷ்டி' என்று பொருள். அந்த முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்தால் உனக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும் என்பதையே அந்தச் சித்தர் சொல்லியிருக்கிறார்.
அப்படியே செய்து வா!'' என்றார் புலவர். அப்பெண் "அப்படியே செய்கிறேன்' என்று கூறி மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றாள். கந்த சஷ்டி விரதம் இருந்ததன் பலனாக அழகன் முருகனைப் போலவே ஆண் மகனைப் பெற்றெடுத்தால் அந்த பெண்.
வேலினால் சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டார் முருகப்பெருமான். முருகப்பெருமானின் கை வேலானது ஒளியுடைய வீரவாகுவின் தோள்களிலே அமர்ந்து, பின் அங்கிருந்து மேலே மேலே உயர்ந்து, அழகாக இடமாகவும், வலமாகவும் சென்று வாயு வேகம் கொண்ட சூரபன்மனின் மார்பைப் பிளந்த வேலானது அடியார்களின் மனத் துன்பத்தை ஒழிக்கும்.
அந்தக் கிரௌஞ்ச மலையைத் துளைத்துப் பிளக்கும். இன்பக்கொடியைப் போன்ற, முருகனுக்கு வேல் தந்த அன்னை பார்வதி தேவியின் முன் சென்று நிலைபெறும் என்று அற்புதமாக பாடியுள்ளார் ஒரு புலவர்.
ஆறுநாட்கள் நிகழ்ந்த போரில் இறுதி நாள் சூரசம்ஹாரம் நடைபெற்றது. முருகப் பெருமானின் கையில் இருந்த வேல், சூரபத்மனைச் சம்ஹாரம் செய்து பெருமை சேர்த்தது.
செவ்வாய்கிழமையான இன்றைய தினம் கந்த சஷ்டி வருவது சிறப்பு. இன்றைய தினம் மௌன விரதம் அனுஷ்டிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பகலில் உறங்காமல் கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் படித்து கந்தபுராணம் படிக்க வேண்டும்.
இன்றைய தினம் மௌன விரதம் அனுஷ்டிப்பதால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். சூரசம்ஹாரத்தை முடிந்த பிறகு முருகப்பெருமான வணங்கி நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய பின்னர் உங்கள் விரதத்தை நிறைவு செய்யலாம்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6ஆம் திருநாளான இன்று நடக்கிறது.
இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருகிறார். பின்னர் கோவில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் நேரில் தரிசனம் செய்ய அனுமதியில்லை நேரலையில் சூரசம்ஹாரத்தைக் கண்டு தரிசனம் செய்யலாம்.
நாளைய தினம் பிற்பகல் 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து இரவு சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், சுவாமியை தரிசிப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
சூரசம்ஹாரத்தையொட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் வரும் வழியில் 15 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
சூரசம்ஹாரத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா முடிந்த பின்னர் வருகிற 11ஆம் தேதி முதல் பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.