அடிவாங்கிய பிரபல நடிகர்: டிவியை சுக்குநூறாக உடைத்த சிறுவன்
டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் நடிகர் சோனு சூட் அடிவாங்குவதை பார்த்து கோபத்தில் ரிவியை சுக்குநூறாக உடைத்துள்ள நிலையில் பிரபல நடிகர் அறிவுரை வழங்கியுள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து முதல் மற்றும் இரண்டாம் அலையில் மக்கள் பெரும் அவதிப்பட்ட போது நடிகர் சோனு சூட் பல உதவிகளை செய்து வந்தார். இந்நிலையில் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் குருவையா. இவரது மகன் விராட்)7). இந்த சிறுவன் சோனு சூட்டின் தீவிர ரசிகராவார்.
இந்நிலையில், சிறுவன் விராட் சோனுசூட் நடித்த துக்குடு என்ற தெலுங்கு திரைப்படத்தை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், அவரை ஹீரோ மகேஷ் பாபு அடிப்பது போன்று காட்டப்பட்டிருக்கும்.
இதனை அவதானித்த சிறுவன் கோபத்தில் வீட்டிலிருந்த ரிவியை அடித்து நொறுக்கியுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் அவனை தடுத்து நிறுத்தி அது வெறும் படம் என்று கூறி சிறுவனை அமைதிபடுத்தினர்.
இந்த தகவலை அறிந்த சோனுசூட், தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபோன்று டிவியை உடைக்கக்கூடாது, பிறகு உன் தந்தை என்னிடம் தான் டிவி வாங்கித்தரும்படி கூறுவார் என்று நகைச்சுவையாக பதிவிட்டு சிறுவனுக்கு அறிவுரை கூறியுள்ளார். சிறுவன் டிவியை உடைத்த சம்பவம் வேகமாக பரவி வருகிறது.
