41 வயதிலும் கொஞ்சும் அழகு! வைரலாகும் சோனியா அகர்வாலின் புகைப்படங்கள்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் உருவான காதல் கொண்டேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் சோனியா அகர்வால்.
முதல் படமே நல்ல பெயரை பெற்றுத்தர, அடுத்ததாக 7ஜி ரெயின்போ காலனியும் சூப்பர் ஹிட்டானது.
தொடர்ந்து சிம்புவுடன் கோவில், விஜய்யுடன் மதுர படங்களில் நடித்தார். இயக்குனர் செல்வராகனை காதலித்து வந்த சோனியா, திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
ஆனால் சில வருடங்களில் கருத்துவேறுபாடால் பிரிந்தனர், இதனையடுத்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார்.
இதன்படி மலையாள படங்களில் நடித்து வரும் சோனியா அகர்வால், சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது, வயது ஆக ஆக நீங்கள் இளமையாக மாறிக்கொண்டிருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.