படுக்கையில் இருக்கும் படியான டர்ட்டி கமண்டுகள் தவறு! வெளுக்கும் நடிகை சோனா
சோஷியல் மீடியாவில் தான் உட்பட பல நடிகர்களையும் நடிகைகளையும் பற்றி தவறுதலான கமெண்டுகள் செய்யப்படுவதை பற்றி நடிகை சோனா காட்டமான பேட்டி ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அண்மையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
ஒரு படத்தை பற்றியோ, ஒரு படத்தில் நானோ அல்லது வேறொரு நடிகரோ நடித்த கதாபாத்திரத்தை பற்றியோ விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு.
ஆனால் பெர்சனலாக நடிகர், நடிகையரை பற்றி தவறுதலாக பேசுவது மற்றும் படுக்கையில் இருக்கும் படியான டர்ட்டி கமெண்டுகளை பதிவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என கூறியுள்ளார்.
ஒரு பாய்ண்டில் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்க வேண்டும். எல்லார் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர்ஸ் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் சோனா நடிக்கிறார்.
இந்த சீரியலை சந்தான, டாக்டர் சேது நடிப்பில் ‘வாலிப ராஜா’ படத்தை இயக்கிய சாய் கோகுல் ராம்நாத் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.