சாப்பாடு பிரச்சினையால் பெற்ற தாயை துடிதுடிக்க கொன்ற மகன்
காலை உணவு சமைப்பதற்கு தாமதம் ஆனதால் பெற்ற மகன் தாயை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாமதமாகிய உணவு
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புராவில் உள்ள நீதிபதி பீமய்யா லேஅவுட்டில் வசித்து வந்தவர் நேத்ராவதி (40). இவரது 17 வயது மகன் தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார்.
இரவில் தாயுடன் ஏற்பட்ட தகராறில் சாப்பிடாமல் தூங்க சென்றவர், மறுநாள் காலையில் கல்லூரிக்கு அவசரமாக கிளம்பியுள்ளார். அப்பொழுது காலை உணவு செய்வதற்கு தாமதம் ஆகியுள்ளது. இதனால் கோபமடைந்த மகன் தாயை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த இளைஞர் தனது தாயை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டதாக காவல்நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார்.
சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் நேத்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் மகனிடம் விசாரணை மேற்கொண்ட போது, உணவு சமைத்துக் கொடுப்பதற்கு தாமதமானதால் இவ்வாறு தாயை கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |