ஆழ்துளை கிணற்றில் 30 துண்டுகளாக கிடந்த தந்தை! அதிர்ச்சியை ஏற்படுத்திய கோர சம்பவம்
கர்நாடகாவில் தந்தையை கொலை செய்து 30 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தந்தையை கொலை செய்த மகன்
கர்நாடகாவை சேர்ந்தவர் பரசுராம் குலாலி(53). இவருக்கு வித்தலா என்ற 20 வயதில் மகன் உள்ளார். தந்தை மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் ஏற்பட்ட தகராறினால் ஆத்திரமடைந்த வித்தலா, தனது தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து வித்தலாவைக் கைது செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, தந்தை குடித்துவிட்டு தன்னை தொந்தரவு செய்துள்ளதாகவும், கொடுமை தாங்கமுடியாததால், இரும்பு கம்பியை எடுத்து அடித்ததாக கூறியுள்ளார்.
மேலும் தந்தை பரசுராமின் உடலை 30 துண்டாக வெட்டி, மதோல் நகரின் புறநகர்ப்பகுதியில் ஆழ்துளை கிணற்றில் வீசியுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுது்தியுள்ளது.