நீ அப்பாவை லவ் பண்ணிக்கோ! நான் உன்ன லவ் பண்ணுவேன்: சிறுவனின் சுட்டித்தனமான பேச்சு
குழந்தைகள் செய்யும் சுட்டித்தனம் என்பது காண்பதற்கு அழகாகவே இருக்கும். அந்த அளவிற்கு தங்களது பேச்சுத்திறமையை வைத்து அனைவரையும் கவர்ந்து விடுவார்கள்.
இங்கு சிறுவன் ஒருவன் தனது தாயிடம் பேசிய காணொளி ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில் சிறுவனின் அவனது சில கேள்விகளை கேட்கின்றார்.
“நான் உன்னை லவ் பண்ண வேண்டுமா? உன் தந்தையை லவ் பண்ண வேண்டுமா?” என்று கேட்டதற்கு, சிறுவனும், “அது உன் சாய்ஸ் அம்மா.. நீ அப்பாவையே லவ் பண்ணு” என்று சோகமாக சொல்கிறார்.
அதன் பின்னும் விடாமல் கேள்வி கேட்கும் அந்த சிறுவனின் அம்மா, “சோகமாக சொல்றியே? ஒருவேளை நான் உன் தந்தையை மட்டும் லவ் பண்ணினால் நீ என்னை புறக்கணித்து விடுவாயா?” என்று கேட்கிறார்.
அதற்கு சிறுவன், “நான் உன்னை புறக்கணித்துவிட்டு எங்கே அம்மா செல்ல முடியும்? எங்கே போவது என்று கூட எனக்கு தெரியாது!” என்று அழகாக கூறுகிறான்.
மேலும் அந்த அம்மா, “அப்போது உன் தந்தையை லவ் பண்ணினால், நீ என்னை லவ் பண்ண மாட்டாயா?” என்று கேட்கும் போது, அதற்கு அந்த சிறுவன், “அப்படியெல்லாம் இல்லைம்மா.. நீ என்னை லவ் பண்ணலனாலும் நான் உன்னை லவ் பண்ணுவேன்” என்று தனது பதிலால் வாயடைக்க வைத்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.