பெற்ற தாயை கொலை செய்த மகன்! பின்னணியில் பகீர் உண்மை
சொத்து பிரச்சினையால் பெற்ற தாயை மகன் ஒருவர் விபத்தை ஏற்படுத்தி கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் உயிரிழந்த கணவர்
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன், இவரது மனைவி முருகம்மாள். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சங்கரநாராயணன் விபத்தில் ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இதில் ஆஜராக முருகம்மாள் தனது இளையமகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்பொழுது பின்னே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருவரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் முருகம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உடன் சென்ற இளைய மகன் உதயமூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிசாரின் விசாரணையில் முருகம்மாளுக்கும் மூத்த மகன் மோகனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்துவந்தது தெரியவந்துள்ளது.
மேலும் சங்கர நாராயணன் இறந்த வழக்கில் கிடைத்த நஷ்ட ஈடு தொகையையும் தாயிடமிருந்து கேட்டு சண்டையிட்டுள்ளார். இதற்கு முருகம்மாள் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் இருந்த மோகன் தாயை கொலை செய்ய தீர்மானித்துள்ளார்.
பின்பு விபத்தை ஏற்படுத்தி தாயையும் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. தப்பி ஓடி தலைமறைவான மோகனை பொலிசார் தேடி வருகின்றனர்.