அம்மாவின் தங்க சங்கிலியை துண்டு துண்டாக வெட்டிய சிறுவன் - ஏன் தெரியுமா?
சீனாவில் நாம் நட்பை வளர்ப்பதற்காக சிறுவன் ஒருவன் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் சம்பவம்
சீனாவில் சிறுவன் ஒருவன் தனது பள்ளி நண்பர்களுக்கு நட்பை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தன் தாய் அணியும் தங்கச் சங்கிலியை துண்டுகளாக வெட்டிக் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தாய்க்கு தெரியாது. தனது மகள் பள்ளியில் நடந்த சுவாரஷ்ய விடயங்களை தன் தாயிடம் கூறியபோதே இந்த விடயம் தாய்க்கு தெரியவந்துள்ளது. உண்மையை அறிந்த தாய் சிறுவனிடம் நடந்ததை விசாரிக்க தொடங்கியுள்ளார்.

அப்போது அந்த சிறுவன் தான் எத்தனை துண்டுகளாக சங்கிலியை வெட்டினார் மற்றும் யாருக்கு கொடுத்தார் என்பதற்கான விவரங்களை அவன் மறந்துவிட்டதாக தாயிடம் தெரிவித்துள்ளார்.
இது ஒரு புதுவிதமான விடயமாக இருந்ததால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த சம்பவத்தை ஆச்சரியமாகப் பார்த்துள்ளனர்.

சிறுவனின் நட்பு மற்றும் பகிர்வு மனோபாவம் பாராட்டத்தக்கது என சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுள்ளன. அனாலும் தாய்க்கு தன்னுடைய ்தங்க சங்கிலி போனது கவலை தானே.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |