17 மணி நேரம் தூங்காமல் கேம் விளையாடிய சிறுவன்.. தந்தை கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?
11 வயது மகன் 17 மணிநேரம் தூங்காமல் வீடியோ கேம் விளையாடியதால் தந்தை ஒருவர் கொடுத்துள்ள தண்டனை வைரலாகி வருகின்றது.
விளையாட்டுக்கு அடிமையாகிய மகன்
இன்றைய டிஜிட்டல் உலகில் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுவதில் பெரும்பாலான நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.
சீனாவின் ஷென்சென் நகரைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நள்ளிரவு 1 மணிக்கு விளையாடி உள்ளான். இதனை கண்டுபிடித்த தந்தை அந்த சிறுவனை மேலும் பல மணிநேரம் விளையாட கூறியுள்ளார்.
சிறுவன் தனக்கு முடியவில்லை என்று கூறியும் விடாத தந்தை தொடர்ந்து 17 மணிநேரம் விளையாடியுள்ள இறுதியல் வாந்தி எடுத்துள்ளான்.
பின்பு தான் மகன் செய்த தவறுப்பு மன்னிப்பு கேட்டதுடன், கடிதம் ஒன்றினையும் எழுதி கொடுத்துள்ளதர் குறித்த கடிதத்தில், "எனது அப்பா நான் விளையாடுவதை கண்டுபிடித்தார்.
பின்னர் என் தந்தை என்னை தண்டித்தார். 17 மணி நேரம் விளையாடினேன். நான் இரவு 11 மணிக்கு முன் படுக்கைக்குச் செல்லுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.
படுக்கைக்குச் செல்வதற்கு முன் தொலைபேசியை வைத்து விளையாட மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். தந்தை மகனுக்கு தந்த இந்த வினோத தண்டனைபேசுபொருளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.