செய்த பாவங்களை போக்கும் சிவன் மந்திரம்!
இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர் சிவன்.
சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.
இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும்,
தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.
பாவங்களை அழிக்கும் கடவுள்களில் சிவன் தான் முதன்மையானவராக காணப்படுகிறார்.
தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களை சிவ நாமங்கள் சொல்வதாலும், சிவனின் மகிமை பாடுவதாலும் சரிசெய்ய முடிகிறது.
அந்த வகையில் சிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.