கருப்பை வாய் புற்றுநோய் வருவதற்கு இதுதான் காரணமாம்... அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக தற்போது அதிகமான பெண்கள் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கான முக்கிய காரணம் ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். கருப்பை புற்றுநோயால் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர்.
சரியான மருத்துவ வசதியில்லாத பெண்களுக்கு முறையான தடுப்பூசி வழங்காமை மற்றும் ஒழுங்குப்படுத்தப்பட்ட பரிசோதனைகள் இன்மை ஆகிய காரணங்கள் இந்த நோய் தீவிரமடைகின்றன.
கடந்த முப்பது வருடங்களாக முறையான பரிசோதனை மற்றும் நோய் கண்டறிதல் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றமையினால் கருப்பை புற்றுநோயின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
புற்றுநோயை கண்டறிந்த பின்னர் ரேடிகல் ஹிஸ்டெரெக்டோமி, கீமோ ரேடியேஷன் அல்லது இரண்டும் சேர்த்து கூட சிகிச்சை அளிக்கலாம்.
அந்த வகையில், கருப்பை வாய் புற்றுநோய் அபாயத்தை தடுக்கும் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
புற்றுநோய் அபாயத்தை குறைப்பது எப்படி?
1. புகை பிடிப்பதற்கும் கருப்பை வாய் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆகவே இந்த பழக்கம் உள்ளவர்கள் சற்று குறைத்து கொள்வது சிறந்தது.
2. ஆரோக்கியமான வாழ்க்கை முறை.
3. HPV தொற்றை பரிசோதிப்பது அவசியம்.
4. பாதுகாப்பான முறையில் உறவை பேணல்.
5. மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளில் அடிக்கடி ஈடுபடுதல்.
6. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை டயட்டில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
7. அடிக்கடி கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
8. சீரான உடற்பயிற்சி மூலம் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
சிகிச்சை
அவ்வப்போது Pap smears மற்றும் HPV பரிசோதனைகளை மேற்கொள்ளல் வேண்டும்.