நஞ்சாகும் உணவுகளை தெரிஞ்சிக்கோங்க! எதனுடன் எதை சாப்பிடக்கூடாது?
நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் ஆரோக்கியத்திற்காகவே. அவ்வாறு ஆரோக்கியத்திற்கு எடுக்கும் உணவுகள் எந்த நேரத்தில் நமக்கு விஷமாக மாறுகின்றது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆம் சில உணவுகளுடம் கலந்து மற்றொரு உணவினை சாப்பிட்டால் அது நஞ்சாக மாறி நமக்கு பெரும் ஆபத்தினை ஏற்படுத்திவிடும்.
அவ்வாறு எந்த உணவுகளுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

நஞ்சாகும் உணவுகள் எவை?
பாலுடன் மீன், புளிப்பு கனிகள், கீரைகள் சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து.
தயிருடன் கோழிக்கறி அல்லது மாமிசத்தைக் கலந்து சாப்பிடக்கூடாது.
தயிருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிட வேண்டாம்.
முள்ளங்கியுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து சாப்பிடுதல் கூடாது.
வெற்றிலையும், எண்ணெய்யையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.
கொத்துப்பசளையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிடக்கூடாது.
தேன் நெய் எண்ணெய் நீர் இவைகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது கூடாது.

நாரையை பன்றி நெய்யில் பொரித்தல் வேண்டாம்.
மீன் பொரித்த எண்ணெய் அல்லது நெய் உண்பதை தவிர்க்கவும்.
கரும்பு தின்றவுடன் நீர் அருந்தினால் பல உபாதைகளை ஏற்படுத்தும்.
சாராயமும், சர்க்கரையையும் சேர்த்து சாப்பிடுதல் வேண்டாம்.
உணவு உட்கொண்ட 1 மணிநேரத்திற்குள் கடினமான வேலை மற்றும் குளித்தல், விளையாடுவது, நீந்துவது இதனை செய்யக்கூடாது.
இரவில் கீரைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
