சிவபெருமானுடைய திருவிளையாடல்கள் குறித்து நீங்கள் அறியா சில உண்மைகள்!
பொதுவாக நாம் அனைவரும் வணங்கும் தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மையாக இருப்பவர் சிவன். இவருடைய பக்தராக இருப்பது என்பது சாதாரண விடயமில்லை.
இவருடைய சிறப்பை எடுத்து கூறுவது 'சிவபுராணம்' எனப்படுகிறது. ஆனால் தமிழர்களின் சிவபுராணமாக “நமச்சிவாயம் வாழ்க!” என தொடங்கும் பாடல்களை கூறுவார்கள். மேலும் இதில் பெருபான்மையாக சிவ தத்துவங்களே விளக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஆதிக்காலம் தொட்டு இவருடைய தீவிர பக்தர்களால் திருஞானந்த சம்பந்தர், திருநாவுகரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்போர் பார்க்கப்படுகிறார்கள். இவர்களிடம் சிவபெருமான் பாலை,சூலை, ஓலை,காலை என நான்கு விதமான சோதனைகளை நடத்தியதாக புராதாண கதைகள் கூறுகின்றது.
அந்த வகையில் சிவபெருமான் அடியார்களிடம் விளையாடிய திருவிளையாடல்கள் குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.

சிவபெறுமானின் திருவிளையாடல்கள்
திருஞானந்த சம்பந்தர்
திருஞானந்த சம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருக்கும் போது பசியால் அழுதுள்ளார். அப்போது சிவபெருமான் அம்மையப்பராக தோன்றி பாலைக் கொடுத்து அதற்கு பதிலாக தேவாரம் பாட வைத்துள்ளார்.

திருநாவுக்கரசர்
தொடர்ந்து அடுத்த அடியாரான திருநாவுக்கரசர் சிவ வழிப்பாட்டை மறந்து எண்ண போல் வாழ்க்ககையென வாழ்ந்துக் கொண்டிருக்கையில் அவருக்கு சூலையென அழைக்கப்படும் வயிற்று நோயை கொடுத்து திருவிளையாடல் நடத்திய தன்னுடைய மகிமையை புரிய வைத்துள்ளார்.

சுந்தரர்
சிவபெருமான் வயயோதிபர் வேடத்தில் வந்து சுந்தரரை அவருடைய அடிமை என கூறி, அவருடைய அடிமை சாசனத்தையும் காட்ட ஆட்க் கொண்டுள்ளார்.

மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகருடைய குருநாதராக தோன்றி இவருடைய தலையில் தன்னுடைய பாதத்தை வைத்து தீட்சையளித்து ஆட்க் கொண்டதாக சான்றுகள் கூறுகிறது.

சிவபெருமானுடைய பத்து குணங்களும் இதன் குறிப்புக்களும்
- திருநீறு பூசுதல்.
- ருத்ராட்சம் அணிதல்
- ஐந்தெழுத்து மந்திரம் ஓதுதல்
- சிவனுக்குரிய பாடல்களை பாடுதல்.
- சிவனை பூஜித்தல்
- தானதர்மம் செய்தல்
- சிவன் பெருமைக் கேட்டல்.
- சிவாலயத்தை பராமரித்தல்
- சிவ பக்தர்களோடு சேர்ந்திருத்தல்.
- பக்தர்களுக்கு சேவை செய்தல்.

மேற்படி கூறப்பட்ட குணங்களில் திருநீறு பூசுதல் மற்றும் ருத்ராட்சம் அணிதல் ஆகிய இரண்டும் மிக முக்கியமானதொன்றாகும்.
மேலும் ஒரு பெண்ணிற்கு திருமாங்கல்யம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் சிவ
பக்தரொருவருக்கு கண்டிப்பாக ருத்ராட்சம் அணிவது முக்கியம் என கூறப்படுகிறது.