சமையலறையில் பாம்பு,எலி தொல்லையா? இந்த பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க
நாம் இதுவரை தெரியாத பாம்பு, பல்லி, கரப்பான்,எலி போன்றவை வீட்டில் இருந்து தொந்தரவு செய்யும். எனவே அது இறந்துவிடும் அளவிற்கு ஒரு சிறப்பான பொருளை தயார் செய்வது அது என்ன பொருள் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பாம்பு, பல்லி, கரப்பான்,எலி தொல்லை
வீட்டைச் சுற்றிலும் தொல்லை கொடுக்கும் எலி, பெருச்சாளி, பல்லி, கரப்பான் பூச்சிகளை விரட்ட நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு சிறப்பான கொல்லியை செய்யலாம்.
வீட்டிற்குப் பாம்பு வந்துவிட்டால் பயப்படாமல் இந்த ஸ்ப்ரேயை அடித்தால் போதும், அந்தப் பாம்பு உடனே இறந்துவிடும். அந்தளவிற்கு இது சிறப்பு வாய்ந்தது.
பல்லி, கரப்பான் பூச்சி விரட்ட- கொஞ்சம் கராம்பு எடுத்துக்கொள்ளுங்கள் குறிப்பிட்ட அளவு தூள் உப்பு - சிறிதளவு விக்ஸ் - சிறிதளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் கராம்பை மிக்ஸியில் போடாமல் உரலில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, இடித்து வைத்துள்ள கிராம்பை அதனுடன் சேர்க்கவும்.
இந்த கரைசலை அடுப்பில் வைத்து, ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் ஆகும் வரை நன்றாக கொதிக்க விடவும். பின் உப்பு சேர்த்து அடுப்பை நன்றாக எரியவிட்டு கொதிக்க விட சேண்டும்.
பின்னர் கரைசலை இளம் சூடாக ஆற விடவும். இளம் சூடாக இருக்கும்போதே சிறிதளவு விக்ஸை சேர்த்து நன்றாக கலக்கவும். விக்ஸ் எளிதாக கரைந்துவிடும்.
இந்த கரைசலை இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். காலையில் இத அழகாக செட் ஆகி இருககும். பின்னா தண்ணிர் ஊற்றி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.
இதை கரப்பான் பல்லி இருக்கும் இடத்தில் அடித்தால் விக்ஸின் வாசனையால் பல்லி, கரப்பான் பூச்சி, ஓலைப் பூச்சி மற்றும் சிலந்தி போன்ற எந்த வகையான பூச்சிகள் வீட்டிற்கே வராது.
எலியை விரட்ட- பழைய பிளாஸ்டிக் பாக்ஸ் - ஒன்று துணி துவைக்கும் சோப்பு தூள் - சிறிதளவு கோல்கேட் பேஸ்ட் - சிறிதளவு சிந்தெடிக் வினிகர் - ஒரு டீஸ்பூன் கோதுமை மாவு - தேவையான அளவு விக்ஸ் - சிறிதளவு பிஸ்கட் தூள் பேப்பர் கப் அல்லது தேங்காய் சிரட்டை - ஒன்று போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பிளாஸ்டிக் பாக்ஸில் சிறிதளவு சோப்பு தூளைப் போடவும். அதனுடன் சிறிதளவு கோல்கேட் பேஸ்ட்டை சேர்க்கவும். பிறகு ஒரு டீஸ்பூன் சிந்தெடிக் வினிகரை ஊற்றவும்.
நுரை பொங்கி வரும். ஒரு ஸ்பூனை வைத்து பேஸ்ட் மற்றும் வினிகரை நன்றாக கலக்கவும். கோதுமை மாவையோ அல்லது வீட்டில் உள்ள ஏதேனும் மாவையோ சேர்த்து நன்றாக கலந்து, சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
பின்னர் உருண்டைகளை தட்டையாக்கி, நடுவில் சிறிதளவு விக்ஸை வைத்து நன்றாக மூடி உருண்டைகளாக ஆக்கிக் கொள்ளவும். ஒரு பேப்பர் கப் அல்லது தேங்காய் சிரட்டையில் இரண்டு இரண்டு உருண்டைகளை வைக்கவும்.
விருப்பப்பட்டால், உருண்டைகள் மேல் பிஸ்கட் தூளை தூவி விடலாம். இதன் பின்னர் எலி வரும் இடங்களில் இந்த உருண்டைகளை வைக்கலாம்.
இதை சாப்பிடும்போது எலிகளுக்கு வயிற்று உபாதை ஏற்படும். எலிகளுக்கு ஞாபக சக்தி அதிகம் இருப்பதால், இதை சாப்பிட்ட பிறகு அந்த இடத்திற்கு வராது.
பாம்பை விரட்ட- பழைய பிளாஸ்டிக் பாக்ஸ் - ஒன்று பெருங்காயம் - சிறிதளவு பூண்டு - 4 பல் தண்ணீர் - ஒரு டம்ளர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பழைய பிளாஸ்டிக் பாக்ஸை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் சிறிதளவு பெருங்காயத்தூளை சேர்த்து நான்கு பல் பூண்டை எடுத்து இடித்துக் கொள்ளவும். இடித்த பூண்டை பெருங்காயத்துடன் சேர்க்கவும்.
ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். பெருங்காயம் மற்றும் பூண்டின் சாறு தண்ணீரில் நன்றாக கலக்க வேண்டும்.
இந்த பெருங்காயத் தூளின் வாசனைக்கு பாம்புகள் வரவே வராது. எனவே பாம்பு தொல்லை இருக்கும் இடங்களில் இந்த கலவையை ஸ்ப்ரே செய்தால் போதும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
