Temporarily Banned - உங்களது வாட்ஸ் அப்பில் இந்த மெசேஜ் வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
உங்களது வாட்ஸ் அப்பில் Temporarily Banned என்ற மெசேஜ் வந்தால் பதறிப்போகாமல், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தங்களது பயனர்களுக்காக அடிக்கடி புதுப்புது அப்டேட்களை வழங்கிக் கொண்டிருக்கிறது வாட்ஸ் அப்,
வீடியோ கால், மெசேஜ், புகைப்படங்கள், எமோஜிகள் என அடிக்கடி புது அம்சங்களும் வந்து கொண்டிருக்கின்றன.
ஒருவேளை நீங்கள் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் செயலிக்கு பதிலாக ஆதரிக்கப்படாத பதிப்பை பயன்படுத்தினால் Temporarily Banned என்ற மெசேஜ் வரலாம்.
இந்த மெசேஜ் வந்தவுடன் அதிகாரப்பூர்வ பதிப்பிற்கு நீங்கள் மாற வேண்டும், இல்லையென்றால் நிரந்தரமாக உங்களது கணக்கு தடை செய்யப்படலாம்.
முதலில் நீங்கள், More Options > Settings > Help > App info என்ற தெரிவுக்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் செயலியின் பெயரைக் கண்டறிய வேண்டும்.
வாட்ஸ்அப் பிளஸ் அல்லது ஜிபி வாட்ஸ்அப்பைத் தவிர வேறொரு செயலியை நீங்கள் பயன்படுத்தினால், அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் செயலியைப் பதிவிறக்குவதற்கு முன்னதாக உரையாடல் வரலாற்றைச்(back up your chat history) சேமித்து வைக்க வேண்டும்.
ஒருவர் ஜிபி வாட்ஸ்அப் (GB WhatsApp) பயன்படுத்தினால், இதுவரை செய்த உரையாடலை சேமிக்கவும் மாற்றவும் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தற்காலிக தடை முடிந்த பின்னர், இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.
அவை:
- ஜிபி வாட்ஸ்அப்பில், More options > Chats > Back up chats என்ற தெரிவை கிளிக் செய்யவும்.
- அடுத்து, Phone Settings > tap Storage > Files என்ற தெரிவுக்கு செல்லவும்
- ஜிபி வாட்ஸ்அப் போல்டரை (folder) கண்டுபிடித்து, அதைத் தேர்ந்தெடுக்கவும்.
- மேல் வலது மூலையில் More > Rename என்பதை சொடுக்கி, அந்த போல்டருக்கு "WhatsApp" என பெயரிடவும்.
- Play Storeக்குச் சென்று அதிகாரப்பூர்வ WhatsApp பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
- வாட்ஸ்அப்பில், உங்கள் ஃபோன் எண்ணைச் சரிபார்க்கவும்.
- Backup எடுத்த்ப் பிறகு Restore > Next என்ற தெரிவை சொடுக்கவும்.
- தற்போது, உங்கள் உரையாடல்கள் WhatsAppஇல் சேமிக்கப்படும்.
WhatsApp Plus விஷயத்தில், உரையாடல் வரலாறு முன்னதாகவே சேமிக்கப்பட்டிருந்தால், அது தானாகவே அதிகாரப்பூர்வ WhatsApp பயன்பாட்டிற்கு மாறிவிடும்.