கெட்ட கனவுகள் வந்து பயமுறுத்துகிறதா? மனசார இந்த பரிகாரத்தை செய்திடுங்கள்
பொதுவாக நம்மில் பலருக்கு இரவில் கனவு ஏற்படுவது வழக்கம். கனவுகளில் நல்ல கனவும் வருவதுண்டு. கெட்ட கனவும் வருவதுண்டு.
இருப்பினும் கெட்ட கனவுகள் தூக்கத்தை கெடுக்குமே தவிர இதனை நினைத்து அச்சம் கொள்ள எந்த அவசியமில்லை.
இந்தப் பிரச்சினைக்குச் சுலபமான ஒரு பரிகாரம் உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
குலதெய்வத்தின் மடியில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய மனக் குழப்பங்கள் அனைத்தும் தீர வேண்டும். நிம்மதியான தூக்கம் வேண்டும். மன அமைதி வேண்டும் என்றவாறு வேண்டிக்கொண்டு, எலுமிச்சம் பழத்தை அர்ச்சனை செய்து பெண்களாக இருந்தால் உங்கள் முந்தானையில் அந்த பழத்தை வாங்கவேண்டும். ஆண்களாக இருந்தால் மேலே போடும் அங்கவஸ்திரம் துணியில் வாங்கிக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய குலதெய்வம் அம்மனாக இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் வீட்டு அருகில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவிலுக்கு சென்று இப்படி செய்து வரலாம். வாங்கிய எலுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். குறிப்பாக செவ்வாய்க்கிழமை செய்தால் நல்ல பலன் உண்டு.
அன்று சுத்தபத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம். அசைவம் சாப்பிடக்கூடாது. பூஜை அறையில் எலுமிச்சை பழத்தை தரையில் படும்படி வைக்கக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் கைநழுவி அந்த எலுமிச்சை பழத்தை தரையில் விட்டுவிடக்கூடாது.
செவ்வாய்க்கிழமை இரவு நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு, நீங்கள் தூங்கும் அந்த அறையில் நான்கு திசைகளிலும் நான்கு வெள்ளை காகிதங்களை வைத்து கொள்ளவும்.
அந்த காகிதத்தின் மேல் ஒரு கைப்பிடி அளவு உப்பை வைத்து, அந்த உப்பின் மேல் பக்கத்தில், அம்மன் கோவிலில் இருந்து வாங்கி வந்த எலுமிச்சம்பழத்தை நான்காக வெட்டி, குங்குமம் தடவி, நான்கு திசைகளிலும் நீங்கள் வைத்திருக்கும் பேப்பர் கல் உப்பின் மேல் இந்த பழத்தை, வைத்துவிட வேண்டும்.
மறுநாள் காலை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கட்டி, கால் படாத இடத்தில் தூரமாக போட்டுவிட வேண்டும். இதை நம்பிக்கையாக செய்யும் பட்சத்தில் மிக மிக நல்ல பலன் உண்டு.
உங்களுக்கு அந்த தினம், அதாவது பரிகாரத்தை செய்யும் அந்த இரவு கெட்ட கனவுகள் வரலாம். அல்லது வித்தியாசமான உணர்வினை நீங்கள் அடையலாம்.