பட்ஜெட்டில் செலவு செய்து உலகம் சுற்றும் தமிழன் !
தமிழ்நாட்டு யூடியூப் சேனல்களில் தவிர்க்க முடியாத பட்டியலில் மக்கள் மனதில் முதல் இடம் என்றால் அது தமிழ்டக்கர் புவனி தான்.
இவருக்கென யூடியூபில் தனி ரசிகர் பட்டாளம் உருவாகி கொண்டு உள்ளது. யூடியூபில் பார்க்க எக்கச்சக்க வீடியோக்கள் , சேனல்கள் இருந்தாலும் தற்போது புவனி தான் யூடியூப் பார்வையாளர்களின் நாயகனாக உள்ளார்.
ட்ராவல் பிடித்தவர்கள் ஏராளம். ஆனால் அதனை செயலில் நிகழ்த்திக்காட்டியவர் புவனி. தமிழ் ட்ரெக்கர் சேனல் புவனிக்கு ட்ராவல் என்றால் அலாதி பிரியம்.
அதனை தனக்கென ஒரு அடையாளமாக வைத்து தற்போது அதில் பயணம் செய்து கொண்டும் உள்ளார். இவ்வளவு தூரம் உலகம் சுற்றும் தமிழ்ட்ரெக்கர் புவனி பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் தேர்ச்சி அடையவில்லை.
தமிழ் மொழியை வைத்து கொண்டு உலகம் சுற்றும் தமிழ்ட்ரக்கர் புவனி தனது யூடியூபில் 531 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ்களை வைத்துள்ளார்.