நாளை சூரிய கிரகணம்! கண்டிப்பாக இந்த பரிகாரங்களை செய்திடுங்கள்
தீபாவளிக்கு அடுத்த நாளான நாளைய தினம் தொடர் 30 நிமிடங்களுக்கு உக்கிர சூரிய கிரகணம் நடைப்பெறவுள்ளது.
பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது இந்த சுபகிருது ஆண்டில் ஐப்பசி மாதம் 8-ந் தேதி அதாவது செவ்வாய்க்கிழமை (25.10.2022) அன்று `பார்சுவ சூரிய கிரகணம்' ஏற்படுகிறது.
இந்த கிரகணம் இந்திய நேரப்படி மாலை 5:14 மணிக்கு தொடங்கி 5:44 மணி வரை நடைபெறும். அந்த வகையில் இது போன்று கிரகணங்களின் போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என சில விடயங்கள் இருக்கிறது. இது குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
செய்யக்கூடியவை
- கிரகணம் ஏற்படும் போது தோஷம் பெறும் நட்சத்திரங்களுக்கு என்ன மாதிரியான பரிகாரம் செய்வது என்பது குறித்து தெரிந்து செயற்பட வேண்டும்.
- மேலும் இந்தக் கிரகணத்தால் தோஷம் பெறும் நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை, சதயம் ஆகியவை என்பதால், அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தோஷ நிவர்த்தி செய்தற்கான வழிபாடு, பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.
- கிரகணம் நடைப்பெறும் தமக்கு விருப்பமான இஷ்ட தெய்வங்களை உச்சரிக்கலாம். இவ்வாறு செய்வதால் எமக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுப்படலாம். உதாரணமாக இறை நாமங்களை உச்சரிப்பது நல்லது.
- வழிப்பாட்டிற்கு பிறகு குளிக்கும் தண்ணீரில் கல்உப்பு ஒரு சிட்டிகை அளவு போட்டுக் குளிப்பது நல்லது. இதனால் சூரிய கிரகணத்தால் உடல்நிலையில் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படாது.
- சூரிய கிரகணம் ஏற்படும் போது சூரியனுக்குரிய கோதுமையைத் தானம் கொடுப்பது சிறந்தது. இதனுடன் ஒரு தாம்பாளத்தில் ராகுவிற்குரிய உளுந்து, கேதுவிற்குரிய கொள்ளு கொஞ்சம் வைத்து, அத்துடன் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வைத்து காணிக்கைக் கொடுப்பது சிறந்தது.
- சிலர் கடன் சுமையினால் மிகுந்த கவலையுடன் இருப்பார்கள். இது போன்று பிரச்சினைகள் உள்ளர்கள் கடன் வாங்கியவர்களுக்கு கிரகணம் நேரத்தில் சிறு தொகையை பணத்தை கடன் கொடுத்தவரிடம் கொடுத்தால் கடனை தீர்க்க வழி பிறக்கும்.
செய்யக்கூடாதவை
- கர்ப்பிணிப் பெண்கள், கிரகண நேரத்தில் வெளி பிரயாணங்களை தவிர்க்க வேண்டும் மற்றும் சமைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுப்படக் கூடாது.
- கிரகணத்தை நேராகக் கண்களால் பார்க்கக்கூடாது.
- கிரகண ஆரம்பிக்கும் முன்பே சாப்பிடுவது மற்றும் பானங்கள் அருந்துவது கூடாத பழக்கமாகும்.
கிரகணத்தின் பாதிப்புக்கள்
கிரகண ஆரம்பிப்பதற்கு முன்பும், பின்பும் தொடர் 7 நாட்களுக்கு பூமிக்கு தோஷ காலமாகும். இதனால் கிரகண காலங்களில் பிறக்கும் குழந்தைகளின் வினைப் பதிவு சற்று கடுமையாக இருக்கும்.
இது போன்ற காலத்தில்சூரிய கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தந்தை வழி கர்மாவையும் சந்திர கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தாய் வழிக் கர்மாவையும் அதிகம் சுமந்து பிறக்கும்.
மேலும் கிரகணம் சம்பவிக்கும் போது ராகு, கேது, சூரியன், சந்திரன் ஆகியவை சேர்க்கை ஏற்படும் இதனால் சொந்த பாவகமும், நின்ற பாவகங்களும் பிறந்த குழந்தைகளை சாரும்.
மேலும் இது போன்ற குழந்தைகளுக்கு சூரியன் + ராகு, கேது அல்லது சந்திரன் + ராகு, கேது சேர்க்கை இருக்கும். இதனால் சூட்சம சக்திகள் பொதுவாக இவர்களுக்கு இருக்கும். தீய சக்திகள், பில்லி சூனியம், மாந்தரீகம், செய்வினை எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.
பரிகாரங்கள்
ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான சுப வருடம் ஐப்பசி மாதம் 8-ம் நாள் 25.10.2022 திருக்கணித பஞ்சாங்கப்படி செவ்வாய்கிழமை அமாவாசையன்று பகல் 2.28 முதல் மாலை 6.32 மணி வரை மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் காலபுருஷ 7-ம் இடமான துலாம் ராசியில் சம்பவிக்கும்.
கிரகண நாளில் தோஷம் உள்ளவர்கள் அவர்களுடைய வம்சாவழி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஏழு தலைமுறை பித்ரு சாபம், பித்ரு தோஷம் நீங்கும்.
ஜனன கால ஜாதகத்தில் கடுமையான சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷத்தால், கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கிரகணத்தின் போது நாக பிரதிஷ்டை செய்து வழிபாடுவது சிறந்தது.