சூரிய கிரகணத்தில் இதை செய்யுங்க!1000 மடங்கு பலன் - கடன் தொல்லையே இருக்காது?
கிரகண நேரத்தில் தெய்வீக சக்தி நிறைந்திருக்கும்.
இந்த சமயத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு பல மடங்கு சக்தி உண்டு.
2022 ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் தீபாவளிக்கு மறுநாள் நிகழ உள்ளது.
பகல் 2.30 மணி துவங்கி, மாலை 6.30 மணி வரை கிரகணம் தொடர்கிறது. மாலை 4.30 மணியை கிரகணத்தின் உச்ச நேரமாகும்.

கடன் தொல்லை நீங்க இந்த பரிகாரத்தினை செய்யுங்கள்
கிரகணத்தின் போது இந்த பரிகாரத்தினை செய்து 1000 மடங்கு பலனை அனுபவங்கள். யாருக்காவது பணம் கொடுக்க இருந்தால் அவர்களின் எண்ணிக்கை படி ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
தனித்தனியாக துண்டு சீட்டில் அந்த நபரின் பெயர் எழுதி, எந்த பேப்பரில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து மடித்து, பின்பு அனைவரின் பெயர் எழுதி மீட்டில் வைத்து மடித்து, பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.
இவர்களுக்கு நான் தர வேண்டிய கடனை சீக்கிரம் தந்து கடனில் இருந்து விடுபட வேண்டும் என உங்களின் இஷ்ட தெய்வத்திடமும், அதிர்ஷ்டத்திற்குரிய தேவதைகளிடம் முறையிட்டு வேண்டிக் கொள்ள வேண்டும்.

கிரகண நேரத்தில் இவ்வாறு செய்தால் தீராத கடன் பிரச்சனை தீரும்.
இதே போல் மற்ற காரியங்கள் நிறைவேற, அவரவருக்கு உரிய இஷ்ட தெய்வத்திற்குரியது அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் செய்து, பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்தால் என்ன நினைத்து மந்திர ஜபம் செய்கிறோமோ அந்த காரியம் நிச்சயம் நடக்கும்.
பொதுவாக மந்திர சாஸ்திரப்படி, பொதுவான நேரத்தில் ஒரு முறை இறைவனை வேண்டி மந்திரம் உச்சரித்தால் ஒரு மடங்கு பலனும், அந்திசாயும் நேரத்தில் செய்தால் 10 மடங்கு பலனும், பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் 100 மடங்கு பலனும், பெளர்ணமி, அமாவாசை தினங்களில் செய்தால் 1000 மடங்கு பலனும் தரும்.
அதுவே கிரகண நேரத்தில் செய்தால் லட்சம் மடங்கு பலன்கள் கிடைக்கும்.