கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் குளிர்பானம் - ஆய்வுகளின் எச்சரிக்கை
பொதுவாக தினமும் குளிர்பானங்களை குடிப்பதால் கல்லீரல் புற்றுநோய் மற்றும் ஹெபடைடிஸ் நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
மாதவிடாய் நின்ற பின்னர் இருக்கும் பெண்களை வைத்து இது தொடர்பான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளது.
நாம் வெளியில் செல்லும் போது எடுத்துக் கொள்ளும் குளிர்பானங்களில் சர்க்கரை மற்றும் சோடா அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும்.
இதனை எடுத்து கொள்வதால் உடல் பருமன், புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, செரிமானப் பிரச்சனைகள், எலும்பு ஆரோக்கிய பிரச்சனைகள் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேற்குறிப்பிட்ட நோய்களை தவிர்த்து கல்லீரல் புற்றுநோய், பிரசவத்தில் சிக்கல், இதயப் பிரச்சனைகள், கீல்வாதம் ஆகியவை வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் குளிர்பானங்கள் குடிப்பதால் வேறு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
குளிர்பானங்கள்
1. திருமண நிகழ்வுகள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள், பார்ட்டி இப்படியான நிகழ்வுகளில் சொந்தங்களுக்கு குளிர்பானங்கள் அதிகமாக கொடுக்கப்படுகின்றன. ஆனால் இதனால் மாதவிடாய் முதல் குழந்தை தரிப்பு வரை பிரச்சினை ஏற்படும் என யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
2. சோடா, எனர்ஜி டிரிங், இனிப்பு காஃபிகள் உள்ளிட்ட பானங்களை தினமும் எடுத்து கொள்ளும் போது ஈஸியாக உங்களின் எடை அதிகரித்து விடும். அத்தோடு சேர்ந்து டைப் 2 டயாபடீஸ் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
3. இது போன்ற குளிர்பானங்களில் இருக்கும் அதிகப்படியான கலோரிகள் எடையை அதிகரித்து இதயத்தை பாதிக்கும். இதனால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன.
4. குளிர்பானங்களில் இருக்கும் சேர்மானங்கள் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
5. தினமும் குளிர்பானம் குடிக்கும் ஒருவருக்கு கணையம், மார்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் வரும் ஆபத்து இருக்கின்றன. அத்துடன் சிரோசிஸ், கல்லீரல் வீக்கம் வரவும் வாய்ப்புள்ளது.
6. தினமும் 20 அவுன்ஸ் சோடா பருகும் ஒருவருக்கு 4 வயது அதிகமாக காட்டும். ஏனெனின் இதிலுள்ள கலோரிகள் சருமத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. வயிற்றில் குழந்தையோடு இருப்பவர்கள் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. இதனால் உடல்பருமன், டயாபடீஸ் போன்ற பிரச்சனைகள் வருகின்றன. இப்படியான பிரச்சினைகள் பிரசவ சமயத்தில் பெண்களுக்கு கடுமையான சிரமத்தை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |