சப்பாத்தி மாவு கையில் ஒட்டாமல் வரணுமா? எண்ணெய் இல்லாமல் இப்படி பிசைந்தால் போதும்
பொதுவான எல்லோரது வீட்டிலும் இரவு மற்றும் காலை உணவாக சப்பாத்தி ரொட்டி போன்ற உணவுகளை செய்வது வழக்கம். இது சுலபமும் கூட. இந்த உணவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
இது உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்காத ஒரு உணவு. ஆனால் பெரும்பாலும் பெரியவர்களுக்கு சில நோய்கள் இருக்கலாம்.
அந்த வகையில் எல்லோருக்கும் எண்ணெய் சாப்பிட முடியாது. ஆனால் மாவு பிசையும் போது கைகளில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் சேர்ப்பது வழக்கம் தானே.
அப்படி எண்ணெய் சேர்த்து சாப்பிட முடியாதவர்களுக்கு எண்ணெய் இல்லாமல் மாவை எப்படி கைகளில் ஒட்டாமல் பிசையலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கைகளில் ஒட்டாமல் மாவு பிசைய டிப்ஸ்
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 250 மி.லீ தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். அதே தண்ணீரில் கால் ஸ்பூன் உப்பு சேர்க்க வேண்டும்.
இந்த தண்ணீரை கொதிக்க விடாமல் குட்டி குட்டி சிறிய நீர்க்குமிழி வரும் வரை அதை அடுப்பில் சூடாக்க வேண்டும். பின்னர் இதில் 350 கிராம் மாவை போட்டு நன்றாக கரண்டியை பயன்படுத்தி கலந்துவிட வேண்டும்.
பின்னர் அதை ஐந்து நிமிடங்களில் எடுத்து வேறொரு பாத்திரத்தில் கொட்டி எடுக்க வேண்டும். அந்த பாத்திரத்தில் தண்ணீர் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
இப்போது இந்த மாவு கலவையை கைகளை கொண்டு பிசையும் போது மாவு கைகளில் ஒட்டாமல் அப்படி மிகவும் மென்மையாக வரும். இதை ஒரு முறை செய்து பாருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |