திருமணத்தின் பின்னும் கிளாமரில் பட்டையை கிளப்பும் சோபிதா துலிபாலா! வைரலாகும் நியூ லுக்
நடிகை சோபிதா துலிபாலா ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சோபிதா துலிபாலா
மிஸ் இந்தியா ஃபெமினா அழகுப் போட்டியில் 2013ம் ஆண்டு கலந்துக் கொண்டு அழகிப் பட்டம் வாங்கிய ஆந்திராவை சேர்ந்த சோபிதா துலிபாலா முதல் படமே இந்தியில் நடிக்கம் வாய்ப்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாப்பாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்த இவர், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை ரகசியமாக சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பாரம்பரிய தெலுங்கு முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

சோபிதா நாக சைதன்யாவை திருமணம் செய்தபிறகு கடும் ட்ரோல்களை தற்போது வரை சந்தித்து வருகிறார். சமந்தா விவாகரத்துக்கு அவர் தான் காரணம் என நெட்டிசன்கள் சோபிதாவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ட்ரோல்கள் ஒருபக்கம் இருக்க சோபிதா தொடர்ந்து தனது கெரியரில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பேஷன் ஷோ ஒன்றில் ஷோ ஸ்டாப்பர் ஆக வந்து கிளாமர் உடையில் ரேம்ப் வாக் செய்திருந்தார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |