உலகழகி சாயலில் திருமணப்புடவை அணிந்த ஷோபிதா துலிபாலா! விலை மட்டும் இவ்வளவா?
கடந்த 4ம் திகதி சோபிதா துலிபாலாவ நாக சைதன்யா இருவருக்கும் திருமணம் இனிதே திருமணம் நடைந்து முடிந்தது. இந்த நிலையில் சோபிதா துலிபாலா திருமணத்தின்போது அணிந்திருந்த புடவை பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சோபிதா துலிபாலா புடவை விபரங்கள்
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் நடந்த 4ம் திகதி பிரமாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டினுடைய சொந்தங்களும் திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
இதில் சோபிதா மற்றும் நாக சைதன்யா இருவரும் அவரவர் கலாச்சாரத்தில் உடையணிந்திருந்தனர். தற்போது வெளியாகிய தகவலின் படி சோபிதா துலிபாலா ஒரு பாரம்பரிய பட்டு சீரா புடவையைத் தேர்ந்தெடுத்திருந்தார்.
இந்த புடவையை பிரபல கோடூரியர் நீதா லுல்லா வடிவமைத்தார். இவர் தான் உலக அழகி ஐஸ்வர்யாவிற்கும் திருமணத்தின் போது புடவைக்கு வடிவமைத்தார் என தகவல் வெளியாகி உள்ளது.
சோபிதாவினுடைய புடைவை உண்மையான தங்க ஜரியுடன் கூடிய அழகிய பழங்கால தங்க காஞ்சீவரம் பட்டு, பாரம்பரிய கைவினைத்திறனுடன் செழுமையான கலைத்திறனை கொண்டு வடிவமைக்கப்ட்டுள்ளது.
இதன் விலை INR 30,000 முதல் INR 2.15 லட்சம் வரை இருக்கும் ஆனால் சோபிதா துலிபாலாவின் புடவை இதை விட அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |