என்னது சோபிதா துலிபாலா கர்ப்பமா இருக்காங்களா? குடும்பத்தாரின் புதிய அப்டேட்
நடிகை சோபிதா துலிபாலா கர்பமாக இருக்கிறார் என தீயாய் பரவிய தகவலுக்கு குடும்பத்தார் பதிலளித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சோபிதா துலிபாலா
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி நாக சைதன்யா 2ஆவதாக நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்தார். நடிகை சமந்தாவின் காதல் கணவரை இரண்டாம் தாரமாக சோபிதா திருமணம் செய்துள்ளார்.
சமந்தாவுடன் விவாகரத்து பெற்ற பின்னர் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வந்தாக சமூக வலைத்தள பக்கத்தில் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது திருமணமாகி சைதன்யா, சோபிதா தம்பதியினராக அன்யோன்யமாக வாழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் சோபிதா துலிபாலா பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கு நாக சைதன்யாவும், அவரது தந்தை நாகார்ஜுனாவும் ஆதரவளித்து வருகின்றனர்.
திருமணம் முடிந்த சில நாட்களுக்கு பின்னர் சோபிதா துலிபாலாவின் தளர்வான உடையுடனான ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகிய போது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் பரவியது.
அதற்கு தற்போது விடையளித்துள்ளனர் குடும்பத்தினர் அதாவது சோபிதா கர்ப்பமாக இருப்பதாக பரவிய தகவல் தவறானது என்றும், அவர் அணிந்திருந்த தளர்வான உடை காரணமாக அப்படித் தோன்றியதாகவும் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
