முகத்திற்கு சோப்பு பயன்படுத்துறீங்களா? பக்கவிளைவுகள் அதிகம் ஜாக்கிரதை
முகத்திற்கு போப்பு பயன்படுத்தினால் அதிகமான பக்கவிளைவுகள் ஏற்படுகின்றது. அவை என்னென்ன என்பதை இப்பதிவில் காணலாம்.
முகத்திற்கு சோப்பு
இன்று பெரும்பாலான நபர்கள் முகத்தை அன்றாடம் சோப்பு போட்டு முகத்தை கழுவுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவை சருமத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய் மற்றும் மாசுக்களை நீக்கி சுத்தமாக வைப்பதற்கு உதவுகின்றது.
ஆனால் நாம் முகத்தினை கழுவுவதற்கு சோப்பு பயன்படுத்தினால் பல பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதையும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
பக்கவிளைவுகள் என்ன?
தற்போது வரும் பெரும்பாலான சோப்புகளில் ரசாயனங்கள் அதிகமாக சேர்க்கப்படுகின்றது. இவை சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்யைக் குறைக்கலாம்.
சில தருணங்களில் தோலில் வறட்சி, எரிச்சல் ஏற்பட்டு தோலற்சி தோலில் தடுப்பு பிரச்சினை ஏற்படும்.
சோப்பு பயன்படுத்துவதால் சருமத்தின் pH சமநிலையை சீர்குலைக்கின்றது. தோலில் இருக்கும் அளவை விட சோப்பில் அதிகமாக இருப்பதால் இவை, முகத்திற்கு பருவை ஏற்படுத்துகின்றது.
சோப்பு பயன்படுத்துவதால், முகம் சுருக்கமாகவும், முதுமையாகவும் காணப்படுகின்றது. ஆதலால் உண்மையான வயதை விட வயதானவர்களாக தோன்றலாம்.