சோன் பப்டியை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்கான ரெசிபி இதுதான்!
இந்தியாவில் மாத்திரமல்ல உலகில் வாழும் எல்லோருக்கும் இனிப்பு என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. இந்த இனிப்பு வகைகளுக்காக தங்களின் நாக்கை அடிமையாக்கியவர்கள் இங்கு ஏராளமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி இந்திய இனிப்பு வகைகளில் லட்டு, சாங்கரி என்று பலவகை இனிப்புக்கள் இருந்தாலும் இந்த சோன்பப்டிக்கு ரசிகர்கள் அதிகம். சோன் பப்டியை தினம் தினம் சாப்பிட ஆசைப்படுபவர்கள் இனி கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே தயாரிக்கலாம் எப்படித் தெரியுமா?
தேவையான பொருட்கள்
- மைதா மாவு- அரை கப்
- கடலைப் பயறு மாவு- ஒரு கப்
- நெய்- அரைக்கப்
- சர்க்கரை - ஒரு கப்
- எலுமிச்சை பழம், உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - சிறிதளவு
- பிஸ்தா பாதாம், முந்திரி - தேவையான அளவு
- ஏலக்காய் - சிறிதளவு
செய்முறை
முதலில் மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி உருக வைக்க வேண்டும்.
நெய் உருகியவுடன் அதில் கடலை மா சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர் மைதா மா சேர்த்து அதனையும் கலந்துக் கொள்ள வேண்டும். பிறகு தண்ணீர் சேர்க்காமல் வறட்சியாக 10 நிமிடத்திற்கு வதக்க வேண்டும்.
இப்படியே வதக்கிக் கொண்டிருக்கும் போது மா நன்றாக உருகி வரும் அப்போது அதில் தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து அதை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் சக்கரை சேர்த்து பாகு ஆகும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு ஒரு ட்ரேயில் வெண்ணெய் தடவி ஆற வைத்த சக்கரை பாகுவை ஊற்ற வேண்டும்.
பின்னர் அந்த சக்கரை பாகுவில் தயாரித்து எடுத்துக் கொண்ட மா கலவையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
பின்னர் பொடி பொடியாக நறுக்கி எடுத்துக் கொண்ட பாதாம்,பிஸ்தா, முந்திரி மற்றும் பொடி செய்து வைத்திருக்கும் ஏலக்காய் என்பவற்றை கலவையில் சேர்த்து கலக்க வேண்டும்.
இறுதியில் ஒரு அகலமான ட்ரேயில் கலவையை கொட்டி தேவையான வடிவத்தில் வெட்டி ஆற விட்டு பறிமாரினால் சோன் பப்டி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |