நீங்க சோன் பப்டி விரும்பியா? பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் காணொளி
முற்றிலும் அசுத்தமான முறையில் சோன் பப்டி தயாரிக்கப்படும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தியாவில் பண்டிகைக் காலம் வந்து விட்டால் இனிப்புக்கள் செய்வது அல்லது வெளியில் வாங்குவது வழக்கம்.
அந்த வரிசையில் இனிப்பு விரும்பிகளின் வழக்கமான இனிப்பு வகையாக இருப்பது தான் சோன் பப்டி. இது பல ஆண்டுகளாக அருமையான சுவையில் விற்கப்பட்டு வருகின்றது.
பண்டிகை காலங்களில் அனைவரது வீடுகளிலும் நீங்காத இடம் பிடிக்கும் பண்டமாக பார்க்கப்படும் சோன் பப்டியை சிலர் வீட்டில் வைத்து ரசித்து உண்பதற்கு வாங்கினாலும், விருந்தினர்களுக்கும் அக்கம்பக்கத்தினர்களுக்கும் பரிசாக கொடுக்கும் பண்டமாக உள்ளது.
சோன் பப்டி விரும்பிகளுக்கு அதிர்ச்சி
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சோன் பப்டி தயாரிக்கும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதில், 4 நபர்கள் சோன் பப்டியை சுகாதாரமற்ற முறையில் மற்றும் சுவரை பயன்படுத்தி தயாரிக்கிறார்கள்.
இந்த காணொளியை பார்த்த இணைய பயனர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிலர் உணவுப் பாதுகாப்புக் குறித்த கவலையடைந்தாலும், மற்றவர்கள் எப்படி இருந்தாலும் சோன் பப்டி சுவையே தனி என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |