அரிசியை ஊற வைத்து சமைப்பவரா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க
சமைப்பதற்கு முன்னர் அரிசியை ஊறவைத்து சமைப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அரிசியை ஊறவைத்து சமைத்தல்
சமைப்பதற்கு முன் அரிசியை ஊறவைப்பது மிகவும் நன்மை தரக்கூடிய விஷயமாகும். இந்த பாராம்பரிய முறையில் அரிசியை சமைப்பதால் தூக்கம் நன்கு வரும்.
செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும். இதன் மூலம் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் எவ்வளவு விரைவாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன என்பதை GI லெவல் வெளிப்படுத்துகிறது.
இதை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைப்பதால் நொதி முறிவு ஏற்படுகிறது. இதனால் அரிசியில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் எளிய சர்க்கரைகளாக உடைக்கப்படுகிறது.
அரிசியை இப்படி சமைத்து உண்பதால் ரத்த சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 3-4 மணி நேரம் அரிசியை தண்ணீரில் ஊற வைக்க கூடாது.
இப்படி செய்தால் அரிசியிலுள்ள வைட்டமின் மற்றும் மினரல்ஸ் தண்ணீரில் கரைந்து விடும். எனவே அரிசியை அதிக நேரம் ஊறவைக்காமல் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கலாம்.
அதே போல தண்ணீரில் நன்கு கழுவி சமைக்கலாம், இதன் மூலம் அரியில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.