கருப்பு கொண்டைக்கடலை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டால் இந்த நோய் சரியாகும்- யாரெல்லாம் சாப்பிடலாம்?
கருப்பு சுண்டல் அல்லது கருப்பு கொண்டைக்கடலை என அழைக்கப்படும் தானியத்தில் அதிகமான இரும்புச்சத்து உள்ளது.
மற்ற ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. கருப்பு கொண்டைக்கடலை நாம் குக்கரில் வேக வைத்து உப்பு போட்டு தாளித்து சாப்பிடுகிறோம்.
ஆனால் தண்ணீரில் ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டால் இன்னும் ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கும்.
இதனை வாரத்திற்கு 3-4 முறை சாப்பிடலாம். காலை நேரத்தில் ஊற வைத்த கொண்டைக்கடலை சாப்பிட்டு யானை பலம் கிடைக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அந்த வகையில், ஊற வைத்த கொண்டைக்கடலை பச்சையாக சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
கருப்பு கொண்டைக்கடலையின் பலன்கள்
1. சைவ உணவு பிரியர்களுக்கு போதுமான புரதச்சத்தை கருப்பு கொண்டைக்கடலை கொடுக்கிறது. அதுவும் ஊற வைத்து பச்சையாக சாப்பிடும் பொழுது ரத்த சோகை நோய் குணமாகும். அடிக்கடி உணவுடன் கருப்பு கொண்டைக்கடலை சேர்க்கும் பொழுது உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
2. ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான அமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றும். இதனால் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்.
3. ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையில் ஏராளமான ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன. இது இரத்தக் கட்டிகள் உருவாவதை தடுத்து உடலுக்கு அவசியமான தாதுக்களை கொடுக்கிறது.
4. கருப்பு கொண்டைக்கடலையில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும். ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகள் சாப்பிடுவதை தவிர்த்து, கடலை போன்ற தானியங்களை ஸ்நாக்ஸாக எடுத்து கொள்ளுங்கள்.
5. கருப்பு கொண்டைக்கடலையில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இதனால் உடல் எடை அதிகரிக்காது. கொழுப்பின் அளவைக் குறைப்பதால் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |