மனநிம்மதி வேண்டுமா? ஒரு கட்டிப்பிடி போதும்- நீங்களும் முயற்சி செய்யலாமே
வழக்கமாக நாம் செய்யும் அணைப்பு (HUG) என்பது அதிக அன்பின் வெளிபாடாக பார்க்கப்படுகிறது.
இது உலகெங்கிலும் உள்ள எல்லா கலாசாரங்களிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் மனிதர்கள் மனம் செழிக்க அரவணைப்புகள் அவசியமாகிறது.
அணைப்பு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கிறது. வளர்ந்த குழந்தைகள் ஆனாலும் சிலர் அணைப்பிற்காக ஏங்குகிறார்கள் தந்தையின் ஆறுதலான அணைப்பு குழந்தைகளுக்கு மிகவும் தன்னம்பிக்கையைத் தருவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
“கட்டிப்பிடித்தல்” என்பது ஒரு சக்தி வாய்ந்த செயலாகும். இது எண்ணற்ற, உடல் உணர்ச்சி மற்றும் உளவியல் நன்மைகளைக் கொண்டிருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரவணைக்கும் போது பிள்ளைகள் மிகவும் பாதுகாப்பாக உணர்வார்களாம். பெற்றோர்களின் பாசத்தை அறிந்து கொண்டு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
உறவினர்களை அல்லது நண்பர்களை கட்டிப்பிடிப்பது என்பது அவர்களது உறவு முறையை, நட்பை ஆழப்படுத்தும்.
அக்கறை, அன்பு, பாராட்டு ஆகியவற்றை வெளிப்படுத்த இனி வார்த்தைகள் தேவையில்லை. ஒரு அரவணைப்பு போதுமானது, இப்படி கட்டிபிடித்தலால் ஏகப்பட்ட பலன்கள் உள்ளன.
அப்படியாயின், கட்டுபிடிக்கும் பொழுது என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படுகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |