100 நாட்களா? சினேகன் மனைவிக் கொடுத்த சர்ப்ரைஸ்- பார்த்ததும் கலங்கிய கன்னிகா
100 நாட்கள் கடந்து விட்டதால் சினேகன் மனைவிக் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு பற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினேகன்- கன்னிகா
தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியர், கவிஞர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பன்மக திறமை கொண்டவர் தான் சினேகன்.

உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் பாக்கியலட்சுமி ராதிகா.. இந்த விடயம் கோபிக்கு தெரியுமா? கலாய்க்கும் ரசிகர்கள்
இவர், பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே, ஆராரிராரோ நான் இங்கே இங்கே பாட என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 1-ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.
இதற்கிடையில், 2021ம் ஆண்டு ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சினேகன், அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
மனைவிக்கு கொடுத்த பரிசு
இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு கன்னிகா திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்து முடிந்தது. திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கன்னிகா தாயாகி இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகன் அவருடைய மகள்கள் பிறந்தது முதல் அவர்களுக்கு பெயர் வைத்தது வரையிலான தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், காதல் மற்றும் கவிதை பிறந்து 100 நாட்கள் கடந்து விட்டதால் அதனை கொண்டாடும் விதமாக மூன்று பெண்களுக்கும் கொலுசு வாங்கிக் கொடுத்துள்ளார். கொலுசை பார்த்தவுடன் கன்னிகாவின் முகம் சந்தோஷத்தில் சிவக்கின்றன.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இணையவாசிகள் குடும்பத்தினருக்கு தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |