கேக் வெட்டி மகள்களை வரவேற்ற சினேகன்-கன்னிகா... வைரலாகும் காணொளி
பாடலாசிரைியர் சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் தங்களது இரட்டை குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்து கேக் வெட்டி கொண்டாடியதுடன் கன்னிகாவை கவனித்துக்கொண்ட தாதியர்களுக்கும் பரிசுகளை வழங்கி மகிழ்வித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சினேகன்-கன்னிகா
தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் பாடல்களை எழுதி பாடல் ஆசிரியராக தனது அற்புதமான வரிகள் மூலம் ரசிகர்களில் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் சினேகன்.
பாடலாசிரியர் சினேகன் கடந்த 2021ம் ஆண்டு தனது நீண்டநாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தார்.
சினேகனின் மனைவி கன்னிகா கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 25ம் தேதி அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.
சில தினங்களுக்கு முன்னர் தனது மகள்களை கையில் வாங்கிய தருணத்தையும் அழகிய காணொளியாக வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றனர்.
இந்நிலையில் தற்போது தங்களது இரட்டை குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்து கேக் வெட்டி கொண்டாடிய நெகிழ்சியான தருணத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |