பயந்து நடுங்கிய நடிகை சினேகா! வில்லத்தனத்தை வீடியோ எடுத்து உண்மையை அம்பலப்படுத்திய பிரசன்னா!
தைரியமாக தடுப்பூசி போட்டு கொள்வது போல் நடிகை சினேகா புகைப்படம் வெளியிட்ட நிலையில், அவர் ஊசி போட பயந்து நடுங்கிய வீடியோவை பிரசன்னா வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சூர்யா, ஜோதிகா, சூரி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், வானி போஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.
அந்தவகையில், தற்போது தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளின் ஒருவரான சினேகா - பிரசன்னா ஜோடி முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.
சினேகா மிகவும் தைரியமாக தடுப்பூசி போட்டு கொள்வது போல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டருந்த நிலையில், சினேகா தடுப்பூசி போட்டு கொள்ள பயந்து நடுங்கிய வீடியோவை பிரசன்னா காமெடியாக வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.