நடிப்பை விட்டு புது தொழிலை ஆரம்பித்த சினேகா- அவரே வெளியிட்ட விவரங்கள்
நடிகை சினேகா புதிய பிஸ்னஸ் ஒன்றை ஆரம்பிக்க உள்ள நிலையில், இதை தனது இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளர்.
நடிகை சினேகா
நடிகை நடிகர்கள் பொதுவாக அவர்களின் நடிப்பை மட்டும் நம்பி இருக்காமல் பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் திருமண மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவற்றை வைத்து பிஸ்னஸ் செய்து வருகின்றனர். தற்போது நடிகர்களை விட நடிகைகள் எல்லோரும் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் சொந்த தொழில்களை செய்து வருகின்றனர்.
சிரிப்பழகி என வர்ணிக்கப்படும் சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்
இவ்வாறு இருக்கையில் தற்போது சினேகா புதிய பிஸ்னஸ் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது பற்றிய முழுத்தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை சினேகா
நடிகை சினேகாவிற்கு ஏற்கனவே பண்ருட்டியில் ஒரு கல்யாண மண்டபம் உள்ளது. ஆனால் தற்போது அவர் சம்பாதித்த மொத்த சொத்துக்கயையும் வைத்து புதிய துணிக்கடையை ஆரம்பிக்க உள்ளார்.
இந்த துணிக்கடைக்கு சினேகாலயா சில்க்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கடை எதிர்வரும் 12.ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த துணிக்கடையை ஆரம்பிக்கும் வேலைகளில் மும்முரமாக இருக்கும் சினேகா, பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பிதழை அனுப்பிக் கொண்டிருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
என்னதான் பிஸ்னஸில் சினேகா ஈடுபட்டாலும் அவர் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் விஜய்யின் கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். புதிய தொழிலை ஆரம்பிக்கும் சினேகாவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |