எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி கேட்பீங்க? தொகுப்பாளரிடம் சினேகா ஆவேசம்
நடிகை சினேகா தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு ஆவேசமாக பதில் கூறியுள்ளார்.
நடிகை சினேகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை சினேகா.
இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான “இங்கே ஒரு நீலப்பக்சி” என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து அதே வருடம் “என்னவளே” திரைப்படத்தில் கோலிவுட்டிலும் என்றி கொடுத்தார்.
சினேகா சினிமாவில் இருக்கும் பொழுது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
நட்சத்திர ஜோடிகளாக இருந்து வரும் சினேகா- பிரசன்னா சமூக வலைத்தளங்களில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஆவேசத்தில் பொங்கிய சினேகா
இப்படியொரு நிலையில், நடிகை சினேகா சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அதில் ஒருவர் சினேகாவிடம், '' நீங்கள் ஹீரோக்களுக்கு அக்கா மாதிரி இருக்கீங்க.. இதற்கு மேல் உங்களுடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கும்" என்று கேட்டார்.
இதைக் கேட்டு ஷாக்கான அவர், 'எவ்வளவு தைரியம் இருந்தால் நீங்கள் இப்படி கேட்பீங்க..நான் என்ன நடிகர்களுக்கு அக்கா மாதிரியா இருக்கேன். புதுபேட்டை படத்தின் தனுஷுக்கு ஜோடியாக நடித்தேன்.
அந்த மாதியான கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் நான் இப்போதும் ஃபிட்டாக இருக்கிறேன். என்னால் கதாநாயகியாக நடிக்க முடியும்” என தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை சினேகா இலங்கை வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |