50 நாட்கள் முட்டைக்குள் இருந்து தலையை நீட்டி எட்டிப் பார்க்கும் விஷ நாகப்பாம்பு குட்டிகள்! யாரும் பார்த்திராத மிக அரிய காட்சி
இந்திய ஐ.எஃப்.எஸ். அதிகாரி அவரின் வெளியிட்ட காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சமீபத்தில் தன்னார்வலர் ஒருவரால் மீட்டெடுக்கப்பட்ட பாம்பு முட்டைகளில் இருந்து, 50 நாட்கள் கழித்து, பாம்புகள் வெளியே வரும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.
மலைப்போல குவிந்து கிடக்கும் நாகப்பாம்புகளின் காட்சி பலரை வியக்க வைத்துள்ளது.
தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் மிகவும் விசம் கொண்ட நாகங்களில் ஒன்றான மோனக்ளாட் நாகங்கள் (Monocled snakes) ஆகும்.
1.4 மீட்டர் நீளம் வரை வளரும் இந்த நாகங்களின் இளம் குட்டிகளில் இருக்கும். விசம் வளர்ந்த நாகங்களில் இருக்கும் விசத்தை விட மிகவும் அதிகமாக இருக்கும்.
These cute cobras. Eggs were rescued by our volunteer & after 50 days they are out. Released in wild !! pic.twitter.com/Uuzx2rPQad
— Parveen Kaswan (@ParveenKaswan) August 24, 2021