எங்கு சென்றாலும் இளைஞரை பின் தொடரும் பாம்புகள்- வைரல் வீடியோ
பொதுவாக, உலகளவில் சுமார் 3,900 பாம்பினங்கள் உள்ளன.
பாம்பு என்பது கால்கள் இல்லாத, ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு நீண்ட முதுகெலும்புள்ள உயிரினம் ஆகும்.
பெரும்பாலானவை நஞ்சற்றவை என்றாலும், இந்தியாவில் நாகம், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டுவிரியன் ஆகிய நான்கு பிரதான நச்சுப் பாம்புகள் உள்ளன.

இந்நிலையில், இரண்டு பாம்புகள் ஒரே திசையில் ஒரு இளைஞனைப் பின்தொடர்ந்து செல்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த காணொளியில், இளைஞர் ஒருவர் அறைக்குள் சட்டை அணிந்து கொண்டிருக்கிறார். அப்போது, அவருக்குப் பின்னால் இரண்டு பாம்புகள் காணப்படுகின்றன.
அந்த இளைஞர் சட்டையை மாற்றிவிட்டு அறையை விட்டு வெளியே செல்லும்போது, இரண்டு பாம்புகளும் அவரைப் பின்தொடர்ந்து செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை @nmspiyas என்ற இன்ஸ்டாகிராம் பகிரப்பட்ட நிலையில், இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தெரிவித்துள்ளனர்.
இது உண்மையா? AI வீடியோவா? என கமெண்டுகளும் குவிந்து வருகிறது.