பாம்பிற்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞர்- பாம்பு வாயில் வாய் வைத்து செய்த காரியம்
தனது மூச்சுக்காற்றை கொடுத்து பாம்பின் உயிரை காப்பாற்றிய நபரின் செயல் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
பாம்பை காப்பாற்றிய இளைஞர்
“ பாம்பு என்றால் படையும் நடுங்கும்” என்ற பழமொழியை நம்மில் பலரும் கேள்விபட்டிருப்போம். அந்தளவு பயத்தை காட்டக் கூடிய ஊர்வன விலங்காக பாம்பு பார்க்கப்படுகின்றது.
இப்படியொரு நிலையில், குஜராத்தின் வதோதராவில் பிரதேசத்தை பிறந்த இளைஞர் ஒருவர் கார்டியோபுல்மோனரி ரெசசிட்டேஷன்( CPR) செய்து பாம்பின் உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த சிகிச்சை மூலம் பாம்பின் உயிர் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டது.
யாஷ் தத்வி என்ற குறித்த இளைஞர் அவர் இருக்கும் பகுதியில் அசைவற்று கிடந்த பாம்பை மீட்டுள்ளார். சுமார் ஒரு அடி நீளமுள்ள விஷமற்ற செக்கர்டு கீல்பேக் என்ற ரக பாம்பு அசைவில்லாமல் கிடந்துள்ளது.
பாம்பை பார்த்த போது அது இறக்கவில்லை என்பதனை குறித்த இளைஞர் உறுதி செய்துள்ளார். அதன்பின்னர், எப்படியும் பாம்பின் உயிரை காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் சிகிச்சையை ஆரம்பிப்பார். கடைசியாக பாம்பின் உயிர் காப்பாற்றப்பட்டு விடும்.
சம்பவம் குறித்து பேசிய யாஷ் தத்வி “ நான் பாம்பை மீட்ட போது பாம்பு துளியளவும் அசைவு இல்லாமல் இருந்துள்ளது. இருந்தாலும் பாம்பை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. மனதில் நம்பிக்கையுடன் வாயைத் திறந்து தன் வாயால் காற்றை ஊதி சுமார் மூன்று நிமிடங்களுக்கு CPR முதலுதவி சிகிச்சை செய்தேன். பாம்பு உயிர் காப்பாற்றப்பட்டது.” எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பாம்பின் உயிரை காப்பாற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Vadodara youth brings Snake back to life with Mouth-to-Mouth CPRhttps://t.co/sD9KsxzYWs pic.twitter.com/aJPHRzaQDJ
— DeshGujarat (@DeshGujarat) October 16, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |