Viral Video: மண் தரையில் கொத்து கொத்தாக வெளிவந்த பாம்புகள்.... நடுநடுங்க வைக்கும் காட்சி
வீடு ஒன்றின் தரையில் நல்ல பாம்பு குடும்பமாக பதுங்கியிருந்த காட்சி பார்வையாளர்களை நடுநடுங்க வைத்துள்ளது.
நடுங்க வைத்த பாம்பு கூட்டம்
பொதுவாக ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினமான பாம்புகள் உலகில் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றது.
குறிப்பாக காடுகள், மலைப்பாதைகள், நீர்நிலைகள், வயல்வெளி இவ்வாறு காணப்படுவதை நாம் அவதானித்து வருகின்றோம்.
மேலும் பாம்புகளில் பல வகைகள் காணப்படுகின்றது. குறிப்பாக கொடிய விஷம் நிறைந்த பாம்புகள் அதிகமாகவே இருக்கின்றது.

நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் ஆகிய பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாகும். இவ்வாறு விஷத்தன்மை அதிகம் உள்ளதால் மக்கள் அருகில் செல்வதற்கு கூட தயங்குகின்றனர்.
ஆனால் சமீப காலமாக பாம்புகளை கைகளில் எடுத்து விளையாடவும் செய்கின்றனர். மேலும் வீடுகளில் ராட்சத மலைப்பாம்பினை வளர்ப்பதையும், அப்பாம்புகளுடன் குழந்தைகள் விளையாடுவதையும் அவதானித்து வருகின்றோம்.
பாம்புகளின் உடல்கள் செதில்களால் மூடப்பட்டிருக்கும் நிலையில், தங்களது தோலை குறிப்பிட்ட கால இடைவெளியில் உரிப்பதையும் காணொளியாக அவதானித்துள்ளோம்.
பெரும்பாலும் பாம்புகள் புதர்கள் நிறைந்த பகுதியிலும், காடுகளிலும், வயல்களிலும் தான் அவதானித்து வந்த நிலையில், தற்போது வீடுகளிலும் பாம்புகளை பார்க்க முடிகின்றது.
அதாவது தற்போதைய தட்ப வெப்பநிலை தாங்கமுடியாமல் குளிர்ச்சியான இடங்களைத் தேடி வரும் பாம்புகள் இருசக்கர வாகனங்கள், வீடுகளிலும் பதுங்கிவிடுகின்றது.
அவ்வாறு இங்கு வீடுகளில் பதுங்கியிருந்த பாம்புக்கூட்டத்தின் காணொளி பார்வையாளர்களை நடுநடுங்கவே வைத்துள்ளது. வீடு ஒன்றின் மண் தரையில் சிறிது தோண்டிய போது அதிலிருந்து இரண்டு பாம்புகள் படமெடுத்தவாறு வெளியே வந்துள்ளது.

வெளியே வந்த பாம்புகளை நபர் ஒருவர் பிடிப்பதற்கு முயற்சித்த போது ஒரு பாம்பு கையில் லேசாக கடித்துள்ளது. ஆனாலும் குறித்த நபர் விடாமல் இரண்டு பாம்புகளையும் பிடித்து சாக்கு ஒன்றில் போட்டுள்ளார்.
மேலும் குறித்த பாம்புகள் இருந்த இடத்தினை இன்னும் சிறிது தூரம் தோண்டி பார்க்கும் போது அங்கு குட்டிகள் கூட்டம் கூட்டமாக இருந்துள்ளது. இதனை பக்கத்தில் வைத்திருந்த பாத்திரம் ஒன்றில் நபர் எடுத்து போடுகின்றார்.
பாம்புகள் குறித்த வீட்டின் தரையில் சிறிதளவு ஓட்டையை போட்டு பதுங்கியிருந்து இனப்பெருக்கம் செய்துள்ளது. குறித்த பாம்பு குட்டிகளையும் பத்திரமாக நபர் மீட்டுள்ளார். குறித்த காணொளி பார்வையாளர்களின் பயத்தை மேலும் மேலும் அதிகரித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |