அப்படியென்ன இந்த பாம்பிற்கு கோபம்? தனக்குத் தானே கொடுத்த தண்டனை! வைரல் காட்சி
சமூக ஊடக உலகில், தினமும் ஏதோ ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. சில நேரங்களில் வேடிக்கையான வீடியோக்கள், சில நேரங்களில் மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும் வீடியோக்கல், சில நேரங்களில் திகிலை உண்டாக்கும் வீடியோக்கள் என எல்லா தரப்பிலும் வீடியோக்கள் காண கிடைக்கின்றன.
பெரும்பாலும், பாம்பு வீடியோக்களை பலர் விரும்பி பார்க்கின்றனர். பாம்பு வீடியோ என்றலே, லைக்குகளும் வியூஸ்களும் அதிக அளவில் வருகின்றன.
அந்த வகையில் சில நொடிகளே ஆன ஒரு பாம்பின் வீடியோ வைரலாகி வருகிறது. பல அடி நீளமுள்ள பாம்பு திடீரென்று தன்னை தானே கடித்துக் கொள்வதை அதில் காணலாம். உடலின் நடுப்பகுதியை வாயால் பலமாக கடிப்பதை வீடியோவில் காணலாம். காணொளியில் உள்ள இந்த காட்சி மிகவும் அதிர்ச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் கொடுப்பதாக உள்ளது. ஆபத்தான பாம்பு தனது வாயை முழுமையாக திறந்து விழுங்கத் தொடங்குவதைக் காணலாம்.