தண்ணீருக்காக பரிதவித்த பாம்பு.. வாட்டர் பாட்டிலில் நீரை கொடுத்த நபர்; வைரல் வீடியோ!
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள், ஆனால், அதே பாம்பு தாகத்தில் தவிக்கும்போது இளைஞர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து பாம்புக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கும் வீடியோ காட்சியானது பார்ப்பவர்களின் கண்கலங்க வைத்துள்ளது. அந்த குறிப்பிட்ட வீடியோ காட்சியை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா பகிர்ந்துள்ளார்.
17 வினாடிகள் கொண்ட அந்த காட்சியில், மிகவும் விஷம் வாய்ந்த கோப்ரா இனத்தை சேர்ந்த பாம்பு ஒன்று, தாகத்துடன் சுற்றிக்கொண்டிருந்தததுள்ளது. இதைக்கண்ட இளைஞர் ஒருவர் அருகே சென்று வாட்டர் கேனில் உள்ள தண்ணீரை அந்த பாம்புக்கு குடிக்க கொடுக்கிறார்.
அந்த பாம்புவும் அந்த இளைஞர் ஊற்றும் தண்ணீரை வாட்டர் கேனில் இருந்து அப்படியே குடிக்கிறது. இதுகுறித்து சுசந்தா ட்விட்டரில், அன்பும் தண்ணீரும் வாழ்க்கைக்கு தேவையான இரண்டு சிறந்த விஷயங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.. இக்காட்சியை கண்ட பலரும் தண்ணீரின் தேவையையும், பாம்பின் தாகத்தையும் நினைத்து கண்கலங்கியதாக குறிப்பிட்டு வருகின்றனர்.
Love & water...
— Susanta Nanda IFS (@susantananda3) February 16, 2021
Two best ingredients of life pic.twitter.com/dy3qB40m6N